பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் (21) இன்று பிற்பகல் வாக்கு மூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராகி வருகின்றனர்.
இந்த வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்ப்பு பிரிவின் பொலிஸ் குழுவொன்று பொலிஸ் தலைமையகத்திற்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களின் தொடர்பிலும், அவர்களை கலைக்க முற்பட்டமை தொடர்பிலும் வாக்குமூலம் பெறப்பட உள்ளது.
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபரும் பொது பாதுகாப்பு செயலாளரும் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக அலரிமாளிகையில் இருந்து வந்தவர்கள் சுதந்திரமாக காலி முகத்திடலுக்கு வர அனுமதிக்கப்பட்டதாக தேசபந்து தென்னகோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.