சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஒரு ஊரில் ஒரு இடத்தில் ஜுமுஆவை நடாத்த முடியாமல் இருந்தால் மாத்திரம் பிறிதொரு இடத்தில் ஜுமுஆவை நடாத்தலாம்: ஜம்இய்யத்துல் உலமா

Date:

சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஒரு ஊரில் ஒரு இடத்தில் ஜுமம்ஆவை நடாத்த முடியாமல் இருந்தால் மாத்திரம் பிறிதொரு இடத்தில் ஜுமுஆவை நடாத்தலாம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உலமா சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொவிட் 19 அதிகமாக பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் மஸ்ஜித்களில் ஒன்றுகூடும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் ஜுமுஆக்களை தக்கியாக்கள், ஸாவியாக்கள் போன்ற பல இடங்களிலும் நடாத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டியிருந்தது.

எனினும் தற்போது கொரோனாவுடைய தாக்கம் குறைந்து, மஸ்ஜித்களில் ஒன்றுகூடும் எண்ணிக்கை தளர்த்த்தப்பட்டு, நிலைமை கட்டுக்கோப்பான ஒரு நிலைக்கு வந்திருப்பதன் காரணத்தினாலும், ஜும்ஆவுக்கென்று ஷாபிஈ மத்ஹபில் சில முக்கியமான நிபந்தனைகள் இருப்பதாலும் குறிப்பாக அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுசேர முடியாத நிலைமை இருந்தாலே தவிர, ஒரு ஊரில் ஒரு இடத்தில் மாத்திரமே ஜும்ஆ நடாத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாக, ஏற்கனவே (கொவிட் 19 பரவலுக்கு முன்) ஜுமுஆத் தொழுகை நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த மஸ்ஜித்களில் மாத்திரம் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஜுமுஆக்களை நடாத்துமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஒரு ஊரில் ஒரு இடத்தில் ஜுமுஆவை நடாத்த முடியாமல் இருந்தால் மாத்திரம் பிறிதொரு இடத்தில் ஜுமுஆவை நடாத்தலாம்.

எனினும் ஓர் ஊரில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணாது பிறிதொரு இடத்தில் ஜுமுஆ நடைபெறுமாயின் ஷரீஅத்தின் பார்வையில் இரண்டாவது ஜுமுஆ செல்லுபடியற்றதாகும் என ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஜம்இய்யாவின் கிளைகள் தத்தமது பிரதேசத்திற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு வழிகாட்டி உதவுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

அத்துடன் மஸ்ஜித் நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப மேற்கொள்ளுமாறும் குறித்த அறிக்கையில், கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...