சுற்றுலாத்துறையை மீண்டும் அதன் புத்துயிர் கொடுத்து கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வருவதாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ‘சர்வகட்சி அரசாங்கத்தில்’ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக தனது பணியை இன்று திங்கட்கிழமை (23) ஆரம்பித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, ஆரம்ப கட்டமாக 15,000 சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான திட்டத்தை தாம் நேற்றிரவு (22) தொழில்துறை நிபுணர்களை சந்தித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இது ஒரு ‘முள்ளின் கிரீடம்’, இது ஒரு தற்கொலைப் பயணம், இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் அரசியல் எதிர்காலத்தைப் பணயம் வைத்தோம்.
இந்த நாடு தற்போது வங்குரோத்து அடைந்துள்ளது, எங்களிடம் ஒரு வருவாய் ஆதாரம் இல்லை. அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.