மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகரில் ஒரு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த நாட்டின் ஜனாதிபதி அதிபர் மேக்கி சால் கூறும்போது ‘பொது மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்ததை வேதனையுடன் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த தீ விபத்து சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
டிவாவுனேவின் போக்குவரத்து மையத்தில் உள்ள ‘மேம் அப்து அஜீஸ் சை டபக் மருத்துவமனையில் இந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இது மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டது என்று செனகல் நாட்டின் அரசியல்வாதியான டியோப் சை குறிப்பிட்டுள்ளார்.
நகரின் மேயர் டெம்பா டியோப், ‘மூன்று குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் ஊடகங்களின்படி, குறித்த மருத்துவமனை புதிதாக திறக்கப்பட்டது.
எனினும், பொது சுகாதார அமைப்பின் பற்றாக்குறையால் இதேபோன்ற சம்பவம் ஏப்ரல் பிற்பகுதியில் வடக்கு நகரமான லிங்குவேரில் நிகழ்ந்தது.
இதன்போது, ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது மற்றும் நான்கு பிறந்த குழந்தைகள் பலியாகினர். அந்த ஊரின் மேயர், மகப்பேறு வார்டில் உள்ள ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.