கொடேகொட மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசலால் தராவீஹ் மற்றும் ஜந்து நேர கடமையான தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியமைக்காக பள்ளி நிர்வாகத்தினரால் சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறார்களுக்கு தொழுகையை ஊக்குவிக்கும் முகமாக இந்த புனித ரமழான் மாதத்தில் ஐந்து நேர கடமையான தொழுகை மற்றும் தராவீஹ் தொழுகைக்காக வரும் சிறார்களை கண்காணித்து இந்த பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
யூசுப் பர்ஸான் மற்றும், ஹஸ்னி இன்ஷாப் ஆகிய இருவருக்கும் இந்த பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த சிறுவர்கள் இருவரும் முழுமையாக தராவீஹ் மற்றும் ஜந்து நேர கடமையான தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியமைக்காக பள்ளி நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.