பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசர அவசரமாக விவாதம் செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக எடுத்துக்கொள்வதற்கான நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்மொழிந்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்பட்டது.
இந்த பிரேரணையை முன்வைக்கும் முயற்சியை எதிர்த்த சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரேரணையை முன்னெடுப்பதற்கு முன்னர் வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
அரசாங்கம் 119 வாக்குகளையும், எதிர்க்கட்சி 68 வாக்குகளையும் பெற்றதால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
இதேவேளை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்துடன் வாக்களித்தார்.