நிதியமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு தேசிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகாத வரையில் அது பயனற்ற நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்றும் ஜனாதிபதி இன்னும் நாட்டை வழிநடத்தும் போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்க தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பணம் அச்சடித்தல், இரசாயன உரத்துக்கு தடை, மூலப்பொருட்கள் இறக்குமதியை நிறுத்துதல் போன்ற தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுதான் தற்போதைய பொருளாதாரச் சரிவுக்கு காரணம் என்றார்.
மேலும், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தாங்கள் செய்த தவறை ஏற்றுக்கொண்டு தப்பிக்க முடியாது. இது ஒரு சிறிய தவறு அல்ல. இது ஒரு பாரதூரமான பிரச்சினை’ என்று அவர் கூறினார்.