எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 50 வீதமான தனியார் பஸ்களை இயக்க முடியும் என தனியார் பஸ் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், சில தூர பிரதேசங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பெற்றோல் நிலையங்களில் டீசல் விநியோகம் செய்வதில் பஸ்களுக்கு முன்னுரிமை வழங்கினால் பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ரயில்கள் வழமை போன்று இயங்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று முதல் வழமை போன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீP டி சில்வா தெரிவித்துள்ளார்.