டீசல் பற்றாக்குறையால் 80 வீதமான பொது போக்குவரத்து தனியார் பஸ்கள் இயங்குவதை நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஓட்டோ டீசல் பற்றாக்குறையால் கடந்த சில நாட்களாக சூப்பர் டீசலில் பேருந்துகள் இயக்க முடியும் என்றும் ஆனால் அதை தொடர முடியவில்லை என்றும் பிரியஞ்சித் தெரிவித்தார்.
இதேவேளை எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பேருந்துகளும் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.