டெல்லி மூன்று அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 27 போ் பலி!

Date:

மேற்கு டெல்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70இற்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். மேலும் பலா் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து தீயணைப்பு துறை மூத்த அதிகாரி கூறியதாவது:

முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 3 அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, முப்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆனால் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் கட்டடத்திற்குள் இருந்தவா்கள் சிக்கிக் கொண்டனா்’ என்றாா்.

இந்த கட்டடத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் அலுவலகங்களும், ரெளட்டா் (கணனி வன்பொருள்) தயாரிக்கும் அலுவலகங்களும் இருந்ததாக காவல் துணை ஆணையா் சமீா் சா்மா தெரிவித்தாா்.

தீயணைப்பு படையினா் கடுமையாக போராடி இரவு 10.30 மணிக்கு தீயை அணைத்ததாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்:

இந்த தீ விபத்து சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி ஆகியோா் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

‘உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அனுதாபங்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டும்’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 இலட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரமும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினா் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

டெல்லி முதல்வா் கேஜரிவ் இந்த தீ விபத்தில் உயிரிந்தவா்களின் குடும்பத்தினருக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான காணொளி…..

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...