அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கிடைக்கப்பெற்றதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கு செல்லும் வழிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆளில்லா கேமராக்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் கூர்மையான திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை வெளியாட்களால் செய்யப்பட்டவையே அன்றி பொது மக்கள் அல்ல எனவும் இதனைக் கண்டறிய பாராளுமன்றம் தலையிட வேண்டும் எனவும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இவற்றுக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஜனநாயக பாராளுமன்ற முறைமை வீழ்ச்சியடைந்து அராஜக நாட்டை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.