தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

Date:

இலங்கை தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

அதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, 90 வீதமான கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், எரிபொருள் நிரப்பும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் சாந்த சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...