திருகோணமலையில் சந்தேகத்தின் பேரில் 15 க்கும் அதிகமானோர் கைது!

Date:

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 15 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலேயே இவ்வாறு கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீடுகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் பொலிசாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன இவ்வாறு கருத்து தெரிவித்தார்…..
“இவ்வாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அதுக்கோரள அவர்களின் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பொலிசாரினால் வரவழைக்கப்படும் இளைஞர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எனவும் இவ்வாறான கைதுகள் அரசின் சர்வாதிகாரத்தை வெளி காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் ஜனநாயகமான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என இளைஞர் யுவதிகள் வீதிக்கு இறங்கி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்கும் இவ்வேளையில் இவ்வாறான கைதுளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்த சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன.

மேலும் நாளைய தினம் திருகோணமலை நகரின் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்காக பொலிசரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.”

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...