மேல்மாகணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று மே 23ஆம் திகதி இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் அன்ரனி ஜெனரல் சஞ்சய் ராஜரணம், பொலிஸ்ஸ மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதியில இடம்பெற்ற வன்முறைகள் மீதான விசாரணைகளில் தேவையற்ற தலையீடுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக சட்டமா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது