நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் மக்கள்

Date:

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படுவதில்லை என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் எரிபொருள் தாங்கிகள் உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவடைந்த போதிலும் தொடர்ந்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பல மைல் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நிற்பதைக்காணக் கூடியதாக உள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்றும் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அருகே மீண்டும் வரிசைகள் காணப்பட்டன.

இந்திய உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு ‘இந்தியாவின் அர்ப்பணிப்பை வழங்குவதன் மூலம், 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் இன்று கொழும்பை அடைந்தது.

இதன் மூலம் இந்தியாவிலிருந்து சுமார் 440,000 மெட்ரிக் தொன் எரிபொருளைப் பெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...