தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் நாளை (27) நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேர்தல் ஆணையம் சட்ட கட்டமைப்பிற்குள் எவ்வாறு தலையிடுவது என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.