நாளை முதல் பொலிஸாரின் கண்காணிப்பின் ஊடாக லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்!

Date:

நாளைய தினம் (13) பொலிஸாரின் கண்காணிப்பின் ஊடாக லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் செயற்படுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக நாளை கொழும்பு நகரில் 15,000 சமையல் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது.
அதற்கமைய பொலிஸாரின் தலையீட்டில் எரிவாயு விநியோகம் செய்வதற்கான கலந்துரையாடல்கள் தற்போது, இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

லிட்ரோ எரிவாயு ஏற்றிச்செல்லும் லொறிகளில் உள்ள எரிவாயுவை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று பொலிஸாரின் நேரடி தலையீட்டில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை கடந்த வாரம் கொழும்பு ஆர்மர் வீதி பகுதியில், எரிவாயு கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

எரிவாயு கோரி மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த பார ஊர்தியில் ஏறி எரிவாயு சிலிண்டர்களை முண்டியடித்து எடுத்துச் சென்றனர்.

இதன்போது எரிவாயு அடங்கிய பெருமளவு சிலிண்டர்களும் சில வெற்று சிலிண்டர்களுமாக 100க்கு மேற்பட்ட சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...