நிதியமைச்சராக ஒருவர் நியமிக்கப்படும் வரை அந்தப் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவார்’ என அமைச்சரவைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று மே 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பிலேயே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற போதிலும் நிதியமைச்சின் அமைச்சுப் பதவியை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
இதேவேளை, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யுமாறு இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் காஞ்சனா தெரிவித்தார்.