நிதி, சட்ட ஆலோசகர் நியமனங்களுக்கு 5 பேர் கொண்ட அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர்

Date:

நாடு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், கடன் பெறுவது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஆலோசகர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிப்பதற்கு அமைச்சரவையின் மேற்படி ஐந்து உறுப்பினர்கள் விரைவில் கூடி அங்கீகாரம் வழங்குவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் முழுமையான அமைச்சரவை இல்லாததால் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் நியமனம் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்ததற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘நிதி மற்றும் சட்டக் குழுக்களுக்கு மத்திய வங்கி மற்றும் பிறரால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை நிதி அமைச்சரும் நானும் பார்க்க முடியும், மேலும் அமைச்சரவையின் ஐந்து உறுப்பினர்கள் பெயர்களை அங்கீகரிக்க முடியும்’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடனுதவி கொடுப்பனவுகள் தொடர்பில் கேட்டறிந்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், சரியான தொகையை வெளியிடுவது கடினம்.
‘கிடைக்கும் சில புள்ளிவிவரங்கள் தவறானவை. புள்ளி விவரங்கள் பொய்த்துப் போயுள்ளன,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ‘இலங்கை இன்று கடினமான இயல்பு நிலைக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் சட்ட நிபுணர்களை நியமிக்க இலங்கை தவறிவிட்டது’ என்று ஹர்ஷ டி சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...