‘நிபந்தனைகளை முன்வைப்பதற்கான நேரம் இதுவல்ல’:ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறினார் ஹரின்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக செயற்படப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் கட்சித் தலைமையுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடிய போதிலும் உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் இனி எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தன்னுடன் கூடிய பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான செயல்முறையை தாமதப்படுத்துவதால் தான் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக முடிவெடுத்ததாக ஹரின் தெரிவித்தார்.

மக்கள் ஆணையின் மூலம் ஆட்சியை பிடிப்பது சிறந்ததாக இருந்தாலும், அது போன்ற செயல்பாட்டிற்கான நேரம் இதுவல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிபந்தனைகளை முன்வைப்பதற்கான நேரம் இதுவல்ல என்று நான் சஜித்திடம் கூறினேன். நாம் முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும், அரசியல் ஸ்திரத்தன்மையை எவ்வாறு அடைவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

அவர் பிரதமர் பதவியை ஏற்றிருக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து இயல்புநிலையை ஏற்படுத்திய பின்னர் நிலைமைகளை உருவாக்க வேண்டும். எனினும் அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார்” என்று பெர்னாண்டோ கூறினார்.

மக்களுக்கான தீர்வை முதலில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் புதிதாக அமையும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...