நேபாள விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

Date:

நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 14 உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தியோ சந்திர லால், இன்று AFP செய்தி நிறுவனத்திடம், மற்றவர்களைத் தேடும் பணி தொடர்கிறது என்று கூறினார்.

‘சீரற்ற வானிலை மிகவும் மோசமாகயுள்ள்தால் விபத்து நடந்த இடத்திற்கு எங்களால் ஒரு குழுவையே அழைத்துச் செல்ல முடிந்தது. வேறு எந்த விமானமும் சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேபாள விமானியான தாரா ஏர் இயக்கப்படும் ட்வின் ஓட்டர் விமானம் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனபோது அதில் 19 பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்தனர்.

அவர்களில் நான்கு இந்தியர்கள், இரண்டு ஜேர்மனியர்கள் மற்றும் 16 நேபாளிகள் அடங்குவதாக விமான நிறுவனம் மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9:55 மணிக்கு (0410 GMT) சுற்றுலா நகரமான பொக்காராவிலிருந்து விமானம் புறப்பட்டு, பொக்காராவின் வடமேற்கில் 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள பிரபலமான யாத்திரைத் தலமான ஜோம்சோமுக்குச் சென்றது.

விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள சிப்பந்திகள் என 22 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இதில் விமானம் இமயமலையின் பனிபடர்ந்த பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது.

எனினும், விமானம் எந்த இடத்தில் விழுந்தது, எப்படி விபத்து ஏற்பட்டது என்பது பற்றி நேபாள இராணுவத்தினர் விசாரணை நடத்தினர். இதற்காக இராணுவ வீரர்கள், மீட்பு குழுவினர் விமானம் விழுந்த பகுதியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக இன்று நேபாள இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நாராயண் சில்வால் தெரிவித்துள்ளார்.

இதன்போது, நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானம் விழுந்த இடம் தெரியவந்துள்ளது. சனோஸ்வர், தசாங் 2, முஸ்டாங் பகுதியில் எங்கள் மீட்பு படையினர் விமான பாகங்களை கண்டுபிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

விமானம் விழுந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அங்கு விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது.

இதுபோல விபத்தில் பலியானவர்களின் உடல்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

என்றாலும் பலியானவர்களின் உடல்களை தேடும் பணி தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்களும் மகாராஷ்டிர மாநிலம் பூனாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அசோக் குமார் திரிபாதி, அவரது மனைவி வைபவி பண்டேகர், குழந்தைகள் தனுஷ் மற்றும் ரித்திகா என தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

இன–மத எல்லைகளை தாண்டிய தன்னார்வ சேவை:சிவில் சமூக அமைப்புகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் சந்திப்பு!

கொழும்பு – இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களின் பின்னணியில்,...

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நீர்த்தடை

அம்பத்தலேயிலிருந்து தெஹிவளை வரை செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட...

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...