இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பங்காளதேஷ் அணியின் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பங்களாதேஷ் அணியை முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு இலங்கை கட்டுப்படுத்தியது.
இலங்கை, பங்காளதேஷ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது பங்களாதேஷ்
இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மக்முதுல் ஹசன் ஜாய், தமிம் இக்பால் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
கேப்டன் மொமினுல் ஹக் 9;, நஜ்முல் ஹூசைன் 8 ஓட்டங்களிலும், ஷகிப் அல்-ஹசன் ஓட்டம் எதுவுமின்றி அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 24 ஓட்டகளுக்குள்; 5 விக்கெட்டுகளை இழந்துது.
6ஆவது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
முதல் நாள் முடிவில் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ஓட்டங்களை எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 115 , லிட்டன் தாஸ் 135 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி சார்பில் கசுன் ரஜித 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.