பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் இன, மத நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தவும் விசேட நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டம் ஆனமடுவ தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சங்கட்டிகுளம் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வளவாளராக டி.எம்.கயான் புஸ்பகுமார, பிரியன்த தீபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் சர்வ மதத் தலைவர்களான, ரபாவே சுமண ரதன தேரர், எம்.சவேந்திர சர்மா குருக்கள், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் மௌலவி, அருட்தந்தை ரத்னமலர் ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய வழிகாட்டல்களையும் கருத்துரைகளையும் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வை தேசிய சமாதான பேரவையின் புத்தளம் மாவட்டக்கிளையின் பொறுப்பாளர் முஸ்னியா நெறிப்படுத்தினார்.
அதேவேளை இனங்களுக்கிடையிலான சகவாழ்வு சம்பந்தமான கருத்துக்களை பதிவு செய்யும் வகையில் நடைமுறை உதாரணங்களோடு இந்த பயற்சி செயலமர்வு நிகழ்வு நடைபெற்றது.
அதுமட்டுமில்லாது சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களிடையே வெசாக் கூடுகள் கட்டியும், மேலும் சில விளையாட்டு பயிற்சிகளையும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.