புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கையை பாராளுமன்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார்.
அதன்படி, பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் தரப்பில் முதலாவது பிரதமர் ஆசனம் (ஏழாவது ஆசனம்) புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அதே பக்கத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ முன்னாள் பிரதமராக இருப்பதால் அவருக்கு கண்டிப்பாக முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சியில் முன் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.