பாராளுமன்ற நுழைவாயில் அருகே பதற்றம்: போராட்டக்காரர்கள் பலவந்தமாக கைது?

Date:

பாராளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பலவந்தமாக பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘தவறு என்ன என்பதை தெரிவித்து பின் தம்மை அழைத்துச் செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ள போதும் பெருந்திரளான பொலிஸார் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டு அனைவரும் பொலிஸ் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரும் பாராளுமன்ற நுழைவு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

போராட்டக்காரர்கள் ஏற்றப்பட்ட பொலிஸ் பேருந்தின் உள்ளே இருந்து பேஸ்புக் நேரடி வீடியோ (live)படி, போராட்டக்காரர்களை பொலிஸ் வலுக்கட்டாயமாக கைது செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நேரடி வீடியோ காட்சிகளின் போது, போராட்டக்காரர்களை அழைத்துச் செல்ல உத்தரவிட்ட அதிகாரியை சுட்டிக்காட்டுவதையும் காட்டுகின்றன.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு இடையூறு விளைவிப்பதாலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையூறாக இருப்பதாலும் சட்டத்தை மீறுவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான நுழைவாயில் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அவர்கள் திரண்டிருந்தனர்.

பொதுச் சொத்துக்களுக்கு இடையூறாக இருக்க முடியாது என்பதால் இது சட்டத்திற்கு முரணானது என்றும், இதன் காரணமாக அவர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட போதிலும், அந்த நபர்கள் கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதால், அவர்களை பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...