பிரதி சபாநாயகர் பதவிக்கு அஜித் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளும் செல்லுபடியாகாத வாக்குகள் 23 கிடைக்கப்பெற்றன.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்று (மே 17) பாராளுமன்றம் கூடியது.
அதன்படி இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜித் ராஜபக்ஷவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் திருமதி ரோஹினி கவிரத்னவின் பெயரும் இப்பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.