பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள் ரோஹினி கவிரத்னவை அந்தப் பதவிக்கு முன்மொழிந்திருந்த நிலையில், அரசாங்கம் அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்திருந்தது.
எனினும் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக பொது நிதியையும் நேரத்தையும் வீணடித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், வாக்களிப்பில் இருந்து விலகி இருப்போம் என பல கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த ஒரு நபரை முன்னிறுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.