பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனை வரவேற்பதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்துவதாக கபே அமைப்பின் பணிப்பாளர் திருமதி சுரங்கி ஆரியவன்ச தெரிவித்தார்.
ஏழாவது பாராளுமன்றத்தின் அமைப்பிற்கு அமைவாக 6 வீதத்திற்கும் குறைவான பெண் உறுப்பினர்களே உள்ளதாக அவர் இதன்போது, சுட்டிக்காட்டியுள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் மற்றும் தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்குவதில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் பல கட்சிகளின் தலைவர்கள் அக்கறை காட்டாத காரணத்தினால் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பதின்மூன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாட்டின் சட்டவாக்கப் பணிகளில் பெண்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏனைய தரப்பினரும் செயற்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதி சபாநாயகர் பதவிக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பதே அண்மைக்காலமாக எடுக்கக்கூடிய மிகவும் சாதகமான நடவடிக்கை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் துணை சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகளுக்கான சக்தி வாய்ந்த செயற்பாட்டாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயர் பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.