பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

Date:

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பரிந்துரைக்கப்பட்டார்.

பின்னர் எதிர்க்கட்சிகளால் இம்தியாஸ் பக்கிர் மாக்கர் பரிந்துரைக்கப்பட்டார். மணி ஒலித்த ஐந்து நிமிடங்களின் பின்னர் வாக்களிப்பு ஆரம்பமாகும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (05) அறிவித்தார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை நிமல் சிறிபால டி சில்வா பரிந்துரைத்ததோடு சுசில் பிரேமஜயந்த பிரேரணையை ஆதரித்தார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் வேட்புமனுவுக்கு ஆளும் கட்சிக்கு பூரண ஆதரவு இருப்பதாக பீரிஸ் தெரிவித்தார்.

ரஞ்சித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை நியமித்ததுடன், எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பிரேரணையை ஆதரித்தார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...