புதிய அரசாங்கத்தை அமைக்க தயார்: ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நிபந்தனைகள்!

Date:

புதிய அரசாங்கத்தை அமைக்க 4 நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டைக் கைப்பற்றத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் கடினமான மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக உரிய விடயங்களுக்கு உட்பட்டு நாட்டைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய முதலாவதாக, குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்., இரண்டாவதாக, புதிய அரசாங்கத்தின் பணிகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாது, மூன்றாவதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும், கடைசியாக, பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...