புதிய அரசாங்கத்தை ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

Date:

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

அதேநேரம் நாட்டின் நலனுக்காக தனது பதவிகளை நாடாமல் பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக முற்போக்கான தீர்மானங்களுக்கு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பாக ஆளும் கட்சி உறுப்பினர்களை ஈடுபடுத்த முயற்சித்தால் நிபந்தனையற்ற ஆதரவை இடைநிறுத்துவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், புதிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பதவிகளை ஏற்காமல், பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு தமது பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, கட்சி எம்.பி.க்களுடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்ய முயற்சித்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...