கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட கத்தோலிக்க பேராயர் குழு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஏப்ரல் கடந்த 22ஆம் திகதி வத்திக்கானுக்கு புறப்பட்டனர்.
அவர்கள் இன்று காலை 9.12 மணிக்கு கத்தாரின் தோஹா வழியாக இலங்கை வந்தடைந்தார்கள்.
வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிலவும் நெருக்கடிக்கும் ஆசீர்வாதங்களை வேண்டி, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.