உலக வர்த்தக மையத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக மாறியதையடுத்து, பொலிஸாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் தடுப்புகளுக்கு முன்பாக கூட அமர்ந்திருந்ததை அடுத்து, கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிப்பது குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இதேவேளை கொழும்பு கோட்டைக்கு அருகில் உள்ள உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு 50 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு மாணவர் சங்கங்கள் இளைஞர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு இன்று ஆரப்பாட்டப் பேரணியை நடத்தின.
இந்த பேரணி கொள்ளுப்பிட்டியில் இருந்து கோட்ந்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில் வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த பெரணியை இலங்கை வஙகி சந்தியுடன் நிறைவுக்கு கொண்டு வந்தபோதும் அந்த இடத்தில் இருந்தவர்கள் இரவு 7 மணியளவில் அந்தப்பகுதியில் போடப்பட்டிருந்த வீதித்தடைகளை உடைக்க முயன்ற போது பொலிஸார் இவ்வாறு நீர்ப்பிரயோகம், மற்றும் கண்ணீர் புகைத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.