‘மக்கள் போராட்டத்தை நசுக்குவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்’: ஜே.வி.பி

Date:

மக்கள் போராட்டங்களை நசுக்குவது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறி அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள் அவசரகாலச் சட்டத்தை கண்டித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மக்களின் குரலை நசுக்கி, பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க முயற்சிப்பதை விட, மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல், மக்களின் எதிர்ப்பை திசை திருப்பும் மற்றொரு சூழ்ச்சி.

‘ஒட்டுமொத்த நாடும் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்கிறது. எனவே, முதலில், பிரதமரை இராஜினாமா செய்யச் சொல்வதற்கு பதிலாக, ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்.

பின்னர், முழு அமைச்சரவையுடன் பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும், என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...