மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் புதன்கிழமை (25) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் 2 சட்ட அமுலாக்க அதிகாரிகள் உட்பட 10 பேரின் உயிரைப் பறித்த நாடு தழுவிய வன்முறையாக மாறியது.
நேற்று மாலை மகிந்த கொழும்பிலுள்ள வீட்டுக்கு சென்ற குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல் அதற்கு முன்னர் மகிந்த தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளிட் விடயங்கள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன.
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்காக முன்னர் மே 9 அன்று அலரி மாளிகைகளில் பிரதமர் தலைமையில் ஆதரவாளர்கள் சந்திப்பிற்கு பிறகு அதில் கலந்து கொண்ட சிலரால் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.