முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மகிந்த மீது பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இதன்படி, முன்னாள் ஜனாதிபதி பயணிக்கும் இடங்களிலும், அவரது நிரந்தர வதிவிடத்திலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் சாத்தியம் காணப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்பதால் அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பை வழங்குவது சரியான நேரத்தில் என புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிரகாரம் இதன்படி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையில் வீதித் தடைகளை அமைக்குமாறு மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஓய்வுபெற்ற ‘ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு 05’ விடுத்த எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.