இன்றும் (மே 1) நாளை மறுதினமும் (மே 3) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மே 1 ஆம் திகதி மே தினம் மற்றும் 3 ஆம் திகதி ரமழான் பண்டிகை வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மே 2 மற்றும் மே 4 ஆம் திகதிகளில் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A முதல் L வரையிலான பகுதிகளிலும், B முதல் W வரையிலான மண்டலங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்சாரம் இருக்காது.
மேலும், அந்த பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேலும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும்.
இதற்கிடையில், CC மண்டலங்களில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை 3 மணி நேரம் மின் தடை ஏற்படும்.