மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 1708 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர்களில் 751 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 900 சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் 117 சந்தேக நபர்கள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
78 சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 32 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.