‘மைனா கோ கம’ போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு!

Date:

கொழும்பில் நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க ஆதரவாளர்களால், அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கிடையில், ராஜபக்ஷ ஆதரவாளர்கள் காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை முற்றுகையிட்டபோது இலங்கை பொலிஸாரின் செயலற்ற தன்மை குறித்து பல வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய பொதுஜன பெரமுனவின் தலைவர்களில் ஒருவரான அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் காலி முகத்திடலில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...