பிரதமர் ரணில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவியேற்றார்.
இன்று (25) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
நிதியமைச்சர் அமைச்சு இன்னும் நிரப்பப்படாததால், ஜனாதிபதி தற்காலிகமாக இலங்கையின் நிதியமைச்சராக இருந்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் விரைவில் நியமிக்கப்படுவார். இதேவேளை, 23 அமைச்சுக்களுக்கு நேற்று புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.