அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இது நேற்றைய விலையில் இருந்து 12.51 ரூபாய் குறைவாகும் என்பதுடன் நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 377.49 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.