வெசாக் தினமான மே 15 அன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் இன்றும் நாளையும் (14) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த 2 நாட்களில் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்டும். இருப்பினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால், குறித்த நாட்களில் ஐந்து மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.