ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட அரசியல் கூட்டம் இன்று மாலை 7.00 மணிக்கு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டம் கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.