அரசாங்கத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய நான்கு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
அதன்படி கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்; சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பைசல் காசிம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இஷாக் ரகுமான் ஆகியோர் மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளனர்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் போது இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.
எனினும் நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு தமது ஆதரவை தெரிவித்த அவர்கள், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தையும் கட்சியுடன் இணைந்து முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் இவர்கள் நாட்டின் சமகால விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்திற்கு இனி ஆதரவு வழங்குவதில்லையென இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அறிவித்திருந்த நிலையில், எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக இதன்போது கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌஃபீக் தெரிவித்தார்.