20 இற்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைப்பு: ‘இனி அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்பட மாட்டாது’

Date:

இனி அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

ஆங்கில ஊடகடொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் அலரிமாளிகையில் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு மாத்திரம் பணம் வழங்குவதாகவும் சிலருக்கு தனிப்பட்ட இலாபத்திற்காக மட்டுமே வழங்குவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக பஸ்களை வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மற்றும் அதில் இருந்தவர்கள் கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 20 இற்க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...