19 ஆவது திருத்தத்தை வலுப்படுத்தி ஜனநாயக நாடாக பலம் வாய்ந்த நாடுகளின் நம்பிக்கையைப் பெற முடியும் என்ற போதிலும், பொதுஜன பெரமுன முன்னணியின் ஒரு தரப்பினர் இந்த திருத்தங்களுக்கு இணங்கவில்லை என நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய கொழும்பில் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது 21வது திருத்தத்தை கொண்டு வருவதில் ஏற்படும் தாமதம் மக்களை ஆத்திரமூட்டுவதுடன் நாட்டின் நிலைமையை மேலும் ஆபத்தானதாக மாற்ற முடியும் எனவும் ஜயசூரிய தெரிவித்தார்.
‘அரசாங்கம் புதிய சீர்திருத்தச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர், 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கும் தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளும் கட்சியின் செல்வாக்கு காரணமாக இத்திருத்தம் தாமதப்படுத்தப்படுமாயின் அது பாரிய மக்கள் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும்.
அவரது வாக்குறுதிகள் கடந்த காலத்தைப் போலவே வெற்று வார்த்தைகளாக மக்களால் விமர்சிப்பதை தவிர்க்க முடியாதது. இது ஜனாதிபதியின் தரத்தை அழிக்கும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
உத்தேச சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெளிவுபடுத்திய போதிலும், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் திருத்தங்களை ஆதரிக்கவில்லை என்பது அவரது செய்தி. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டியதன் அவசியத்தை செயலாளர் நாயகம் புரிந்து கொள்ளாததையிட்டு நாம் வருந்துகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்