அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கடந்த கால குறைபாடுகளை போக்கவும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என டலஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை கருத்திற் கொண்டு கடந்த காலத்தில் அரசியலமைப்பில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவும் டலஸ் குறிப்பிட்டுள்ளார்.