22 பேருடன் பயணித்த மாயமான விமானம், நேபாளத்தில் கண்டுபிடிப்பு!

Date:

22 பேருடன் மாயமான ‘தாரா ஏர் 9 என்ஏஇடி’ (Tara Air’s 9 NAET) விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முஸ்டாங்கின் கோவாங்கில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விமானத்தின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

போஹ்ராவிலிருந்து (Pokhara) ஜாம்சோம் (Jomsom) நகருக்கு 4 இந்தியர்கள் உட்பட 22 பயணிகளுடன் புறப்பட்ட வுயசய யுசை’ள 9 Nயுநுவு என்ற விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, இன்று காலை 9.55 மணிக்கு கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தொலைந்துபோன விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக ANI செய்தித்தளம் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், நேபாளத்தில் பயணிகளுடன் மாயமான விமானம் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் நாராயண் சில்வால் தெரிவிக்கையில், நேபாள இராணுவத்திற்கு உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின்படி, தாரா ஏர் விமானம் மணபதி ஹிமாலின் நிலச்சரிவின் கீழ் லாம்சே ஆற்றின் முகத்துவாரத்தில் விழுந்து நொறுங்கியது.

நேபாள இராணுவம் தரை மற்றும் விமானப் பாதையில் இருந்து தளத்தை நோக்கி நகர்கிறது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தொலைந்துபோன இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர், மற்றும் ஜப்பானைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் மாயமானது குறித்து தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், இது குறித்து முழுமையான தகவல் விசாரணையில் தெரிய வரும் என்றும், இந்த விமானம் ஜாம்சோமில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் வானில் தெரிந்ததாகவும், தொடர்பை இழப்பதற்கு முன்பு, விமானம் தௌலாகிரி மாவட்டத்தை நோக்கி பயணிக்க திசை திருப்ப சொல்லப்பட்டதாகவும் மஸ்டாங் மாவட்ட தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...