கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல், மே மாதங்களில் சாதாரண குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இலங்கை குடிசன மற்றும் புள்ளவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய உணவுக்கான செலவு 3,345 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அரிசிக்கான செலவு மாத்திரம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் 989 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
இதுதவிர பால்மாவுக்கான செலவு 369 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, அத்தியவசியமற்ற பொருட்களுக்கான செலவு 2,327 ரூபாவினால் அதிகரித்துள்ளது.