அட்டுளுகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்!

Date:

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், கொவிட் பரிசோதனை முடிவுகளுக்காகவும் காத்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அதிபரின் கீழ் செயல்படும் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு மூலம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சிறுமி ஆயிஷா பாத்திமாவின் மரணம் தொடர்பான சந்தேகத்தின் கீழ் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

https://youtu.be/wg3VhmTBJjI

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...